Published : 22 Oct 2015 11:12 AM
Last Updated : 22 Oct 2015 11:12 AM
விவாதங்களை நோக்கி அமைந்துள்ளது அரவிந்தன் எழுதிய ‘யார் யாரைப் புறக்கணிக்கிறார்கள்?’ கட்டுரை. நவீன இலக்கியத்தின் மீதான திராவிட இயக்கங்களின் பார்வைக்கும், அதிகார அரசியலுக்கும் மிக முக்கியமான தொடர்பு இருப்பதாகக் கருதுகிறேன்.
நவீன இலக்கியமோ அதிகார அரசியலுக்கு எதிராக சமூகம், தனிநபர்களின் இயலாமைகளை, போதாமையை மனிதமனங்களின் கசடுகளைக் களைய முயல்கிறது. இதன்வழி சமூக, அரசியல், பொருளாதாரச் செயல்பாடுகளை மிக நுட்பமாகப் பேசுகிறது.
அதேபோன்று நவீன இலக்கியவாதிகளின் எழுத்துகள் பல இயல்பாகவே இடதுசாரி கண்ணோட்டத்தை நோக்கி பயணப்படுவதைக் காணலாம். வலதுசாரி அரசியலுக்கு இசைவான நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் படைப்பாளிகளின் படைப்புகளும் சில சமயங்களில் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிராக வெளிவருகின்றன.
காலந்தோறும் மக்களின் சிந்தனைகளை, ரசனைகளை ஈர்க்கும் வடிவங்களை தொடர்ந்து கையிலெடுத்தது திராவிட இயக்கம்.
அதில் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த சினிமா என்னும் காட்சி ஊடகம் முக்கியமானது. இவ்வூடகம் குறித்த புரிதல்களை சினிமா ரசனையை பள்ளிகளிலிருந்து கற்றுத்தர வேண்டுமென்ற கோரிக்கையை அதிகார அரசியல் நிராகரித்து வருகிறது. ஆக, நவீன இலக்கியத்தைத் திராவிட இயக்கத்தின் ‘அதிகாரத்துக்கு ஆசைப்பட்ட, ஆசைப்படும்’ தலைமை கொண்டாட மறந்ததோ மறுத்ததோ ஆச்சரியமல்ல.
- ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)தென்சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT