Published : 22 Oct 2015 11:09 AM
Last Updated : 22 Oct 2015 11:09 AM

படித்ததில் பிடித்தது...

புனைகதைகள் தவிர தமிழில் நான் படிக்கும் கனமான விஷயம் ‘தி இந்து’வில் வெளிவரும் நடுப்பக்கக் கட்டுரைகள். அவற்றைத் தவறாமல் படித்துவருகிறேன். மற்றபடி வணிக நோக்குடன் நடத்தப்படும் வார இதழ்களைப் படிக்க நேரம் இல்லை.

சில நாட்கள் முன்பு ‘தி இந்து’வில் வந்த ‘யாரை யார் புறக்கணிப்பது?’ கட்டுரை முக்கியமானது. ‘நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்.. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?’ கட்டுரை மிக மிக முக்கியமானது. அந்தக் கட்டுரையைப் படித்துப்பாருங்கள்.

நான் மாடுகளை தெய்வமாகத் தொழுபவன். ஒவ்வொரு மாடும் எனக்கு தெய்வம். ஆனால் ‘நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடும் உரிமைக்காக என் உயிரையும் கொடுத்துப் போராடுவேன். என் மனம் கவர்ந்த இன்னொரு சிறிய கட்டுரை கட்டுரை அல்ல, அது ஒரு பதிவு பெருந்தேவி எழுதியது. பெருந்தேவி ஒரு பெண் கவிஞர். ஆனால், மற்ற பெண் கவிகளுக்கும் பெருந்தேவிக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. அதை நீங்கள் பெருந்தேவியைப் படித்துப் புரிந்துகொள்ளலாம்.

அவருடைய இந்தச் சிறிய குறிப்பு மனிதனுக்கு இலக்கியம் ஏன் என்று கேட்கும் மண்டுகளுக்கான பதில்!

- சாரு நிவேதிதா, எழுத்தாளர், சென்னை.

***

நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்ற ஒற்றை வரியில் வாசிப்பாளர்களை கேள்விக்குள்ளாக்கிய விதம் அருமை. சம்மட்டிகொண்டு தாக்கியதுபோன்ற உணர்வை எழுப்பியது அந்தக் கட்டுரை. இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்களால் தங்கள் எதிர்ப்பை எழுத்துகள் மூலமே வெளிப்படுத்த முடியும் என்ற நிலையில் விருதை துறத்தல் என்ற அணுகுமுறை ஒரு போராட்டக் குறியீடாகவே கருத வேண்டியுள்ளது. இவற்றில் எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் இடம் கொடுக்காமல் போராட்டத்தை மக்கள் மையப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

-நிலவளம் கதிரவன், நல்லாண்பிள்ளைபெற்றாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x