Published : 27 Oct 2015 11:13 AM
Last Updated : 27 Oct 2015 11:13 AM
நாட்டு மக்கள் பிரதமர் மோடி மீது கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை ‘மோடியின் வியக்க வைக்கும் பலவீனம்’ எனும் கட்டுரையில் துல்லியமாக வெளிப்படுத்திவிட்டார் ராமச்சந்திர குஹா.
உள்நாட்டில் எவ்வளவு முயன்றாலும் மோடியால் நிர்வாகத்தை ஓரளவுக்கு மேல் நகர்த்த முடியவில்லை என்பது மிகச் சரி. மோடியின் அமைச்சரவையில் பதவி வகிக்கும் பல இளைய அமைச்சர்களின் துடுக்குத்தனமான உளறல்களைக் கண்டிக்க மோடிக்குத் துணிச்சல் இல்லை என்பதும் துணிந்து நடவடிக்கை எடுத்தால் அமைச்சரவையில் பிளவு ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் இருப்பதும் கண்கூடாகத் தெரிகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை செயல்படாத பிரதமர் என்றும் மவுனசாமி என்றும் கேலி பேசிய மோடி, பிரதமர் பதவிக்குரிய அழுத்தத்தையும் பொறுப்பையும் தற்போது நன்கு உணர்ந்ததன் காரணமாகவே எதையும் கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறார்.
மோடியின் நிர்வாகம் சம்பந்தமான மவுனத்தால் அவரது அரசு திக்குத்தெரியாமல் தடுமாறுகிறது. தோல்வியை மறைக்கத் தனது அலங்கார மேடைப் பேச்சுகளையும் வெளிநாட்டுப் பயணங்களையும் மோடி பயன்படுத்திக் கொள்கிறார். இந்த தந்திரம் வெகுநாட்களுக்குப் பயனளிக்காது என்பதை மோடி உணர வேண்டும்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT