Published : 27 Oct 2015 11:14 AM
Last Updated : 27 Oct 2015 11:14 AM

எல்லை மீறும் கண்காணிப்பு

‘கடவுளின் இடத்தில் கேமராக்கள்’கட்டுரை கண்காணிப்பின் உச்சகட்டத்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது.

“எல்லா வரங்களும் சாபங்களுடன்தான் வருகின்றன” என்பது நிதர்சன உண்மை. ஆரம்பத்தில் வங்கி, ரயில்நிலையம், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டபோது திருட்டு, கொலை சம்பவங்களைக் கண்டறிய உதவின.

பின்னர், எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடிவுசெய்தது அதிகாரத்தின் உச்சம். வீட்டில் மகன் வீட்டுப்பாடம் செய்கிறானா என சிசிடிவி கேமராவில் கண்காணிப்பது அபத்தம். ஒவ்வொரு கணமும் நாம் கண்காணிப்புக்கு உள்ளாவது அவநம்பிக்கையின் அடையாளம் என்பது பொருள் பொதிந்த வாக்கியம்.

- ப. மணிகண்டபிரபு,திருப்பூர்.

***

‘கடவுளின் இடத்தில் கேமராக்கள்’ கட்டுரை இதுவரை யோசித்திராத கோணத்தில் வித்தியாசமான விதத்தில் எழுதப்பட்டிருந்தது. நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் தனிமனித சுதந்திரத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்று விரிவாக அலசியது.

நாம் அனைவரும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில், நம்மை அறியாமலேயே கண்காணிக்கப்படுகின்றோம் என்று உணரும்போது அதிர்ச்சியாக உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அத்தியாவசியப் பொருளாவதும், தெருச் சந்தைகளில் சல்லிசாகத் துப்பாக்கிகள் கிடைப்பதற்குச் சமமானதுதான் என்ற கூற்று உண்மையானது.

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று உணர்த்தும் கட்டுரை!

- மு. செல்வராஜ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x