Published : 26 Oct 2015 12:33 PM
Last Updated : 26 Oct 2015 12:33 PM
தமிழ் இலக்கியத்தில் விமர்சனக் கலையை வளர்த்த முன்னோடிகளில் ஒருவரான வெங்கட் சாமிநாதனின் மறைவைப் போற்றிய விதம் அருமை.
தமிழின் அடுத்த பாய்ச்சலுக்கு உதவிய ஓர் எழுத்தாளருக்குச் செய்ய வேண்டிய அஞ்சலியை மிக நேர்த்தியாகச் செய்துள்ளீர்கள்.
'தி இந்து'வுக்குத் தமிழுலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது. முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன் பேட்டியில் தமிழ்நாட்டின் பின்னோடிய நிலைக்குரிய காரணங்களை போகிற போக்கில் மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
தாய்மொழி வழிக் கல்வியின் பலம், பயன் ஆகியவற்றை மட்டுமின்றி, சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் 'பரந்த' மனப்பாங்கு தமிழ் நூல்களை வாழ வைப்பதையும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். தமிழுக்கான அடையாளத்தை நாளும் முன்னெடுத்துச் சென்ற, செல்லும் இவர்களே 'மனிதர்கள்!'
- மகன்தீப் பாகிஸ்ரீ, மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT