Published : 26 Oct 2015 12:30 PM
Last Updated : 26 Oct 2015 12:30 PM

இந்தியாவின் எதிர்காலம்

'உலகக் குழந்தைகளின் வெற்றி' கட்டுரையில் கைலாஷ் சத்யார்த்தியின் இதயத்தைக் காண முடிந்தது. குழந்தைகள் வளர்ச்சி மற்றும் நலன் மீது அவர் கொண்டுள்ள தணியாத தாகத்தையும் இளைஞர்கள் மீது அவர் வைத்திருக்கும் அலாதியான நம்பிக்கையையும் புரிந்துகொள்ள முடிந்தது.

'எல்லோரையும்விட நான் இளைஞர்களை விரும்புகிறேன்' என்ற அவரின் வார்த்தை பல இளம் இதயங்களுக்கு மாற்றத்தை நோக்கிய உத்வேகம் கொடுக்கும்.

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையில் மற்ற நாடுகளை விடவும் இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பது கவலைக்குரியது.

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பதை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கட்டாயம் உணர்ந்தாக வேண்டும். கைலாஷ் சொல்வதைப் போல் பதினேழு கோடி குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை எனில், கல்வி இலக்கை நாம் ஒருநாளும் அடைய முடியாது.

- ம.பென்னியமின், பதிப்பாளர், தென்றல் வெளியீட்டகம், பரளியாற்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x