Published : 24 Oct 2015 10:43 AM
Last Updated : 24 Oct 2015 10:43 AM
`வெறும் சோற்றுக்கா?’ கட்டுரையில் சொல்லப்பட்ட அத்தனையும் நிதர்சனம். வடபழனி ஆர்க்காடு சாலையில் பழம் வாங்கும்போது, ஒரு காவல் துறை அதிகாரியின் வாகனம் நின்றது. உடனே, ஒரு முதிய பழக்காரி ஒரு கூடைப் பழத்தை வாகனத்தில் வைத்ததும் வண்டி புறப்பட்டுச் சென்றது.
‘‘ஏம்மா, காசு வாங்கலியா” என்று கேட்டேன். “ ஐயோ சாமி, காசு கேட்டால் பூட்ஸ் காலால் எல்லாவற்றையும் உதைத்துத் தள்ளிவிட்டு வியாபாரத்தையே கெடுத்துடுவாங்க” என்றார். “வேறு யாரெல்லாம் காசு வாங்காமல் எடுத்துச் செல்வார்கள்?” எனக் கேட்டபோது, “கட்சிக்காரங்க, கார்ப்பரேஷன்ல வேலை பார்க்கிறவங்க. காசுக்குச் சாப்பிட்டால் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவாங்க. ஓசி என்றால்
ரூ 100-க்கு” என்றார். ஏழைகளின் வயிற்றில் அடித்துச் சாப்பிடுவதை எப்படி எடுத்துக்கொள்வது?
- ச.சீ. இராஜகோபாலன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT