Published : 07 Jul 2015 11:34 AM
Last Updated : 07 Jul 2015 11:34 AM

மோடியின் மவுனம் ஏன்?

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ள ‘வியாபம்’ஊழல் சாட்சிகளை, விசாரிப்பவர்களைத் தடயமின்றி அழிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது என்றால், நிச்சயமாக இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சக்தி இருக்கிறது என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஊழலைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது என ‘ஜீரோ டாலரன்ஸ் இன் கரெப்ஷன்’ என்கிற முழக்கத்தை முன்வைத்தே மோடி ஆட்சியைப் பிடித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல் என காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் ஸ்தம்பிக்கச் செய்தவர்கள் பாஜகவினர். காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகதான் என மக்கள் வாக்களித்தனர். ஊழலில்லாத ஓராண்டு ஆட்சி என்று பெருமையோடு சொல்லிக்கொண்டிருக்கும்போதே… மகாராஷ்டிராவில், மத்தியப் பிரதேசத்தில் ஊழல்கள்குறித்த செய்தி வெளிவருகிறது.

மத்திய அமைச்சர், ராஜஸ்தான் முதல்வர்களும் தப்பவில்லை. ஊழல்குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்கும் மோடியின் பொறுமை, அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே சந்தேகிக்கத் தோன்றுகிறது.

- சே. செல்வராஜ்,தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x