Published : 06 Jul 2015 11:10 AM
Last Updated : 06 Jul 2015 11:10 AM
நெருக்கடிநிலை பிறப்பிக்கப்பட்டபோது பள்ளி இறுதி ஆண்டு படிப்பை முடித்துவிட்டு, காமராஜரின் தீவிர தொண்டராகப் பணிபுரியத் தொடங்கினேன்.
அப்போது ‘‘இந்தியாவைக் காப்போம். ஜனநாயகத்தைக் காப்போம்” எனும் சூளுரையை நெல்லை ஜெபமணி, ரமணிபாய், நேதாஜி ஆகிய காங்கிரஸ் தொண்டர்கள் தீவிரமாக முழக்கமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யக்கோரியும் நெருக்கடி நிலையை ரத்து செய்யுமாறு, இந்திரா காந்திக்கு காமராஜர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், பயனில்லை. பின்னர், சர்வாதிகார ஆட்சிக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார். தன் கண்முன்னால் இந்திய ஜனநாயகம் வீழ்வது கண்டு மனம் வெதும்பிச் சில மாதங்களில் இறந்துபோனார்.
அவர் மரணமடைந்த உடனே ஸ்தாபன காங்கிரஸை அழிக்கத் திட்டம் தீட்டப்பட்டது. அதுவரை காமராஜரைத் தலைவராக வரித்துக்கொண்ட பல தலைவர்கள் இந்திரா காங்கிரஸில் இணைந்தனர். ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் பா.ராமச்சந்திரன், லட்சக் கணக்கான காமராஜர் தொண்டர்களுடன் இணைந்து நெருக்கடிநிலைக்கு எதிராக நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான அரங்கக் கூட்டங்களை நடத்தினார்.
- மு. பாலசுப்பிரமணியன், மதச்சார்பற்ற ஜனதா தளம்,பல்லடம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT