Published : 01 Jul 2015 10:53 AM
Last Updated : 01 Jul 2015 10:53 AM

அபூர்வ மனிதர்

மகள் மூலம் உலகைக் காண்கிறேன் என்ற பார்வையற்ற வைராக்கியரின் கட்டுரை படித்து வியந்தேன்.

சிறார் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் துவக்கி, தான் கஷ்டப்பட்டாலும் தன் குடும்பம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, பனைமரம் ஏறி தன் குடும்பத்தைக் காப்பாற்றும் முருகாண்டி போற்றப்பட வேண்டியவர்.

தன் இரண்டு பெண் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பச் சொன்னவர்களின் பேச்சைக் கேளாமல், தன் குழந்தைகளின் கல்வி மூலம் தான் உலகைக் காண விரும்புவதாகத் தெரிவித்துள்ள முருகாண்டி வித்தியாசமான மனிதர்!

ஒரு நல்ல மனிதரை அறிமுகப்படுத்திய ‘தி இந்து’வுக்குப் பாராட்டுகள்.

- கிருஷ்ணன் ஜீவன்,கும்பகோணம்.

***

பிறவியிலேயே பார்வையற்றவர்குறித்த செய்திக் கட்டுரை சிறப்பான ஒன்று. ராமநாதபுரத்தின் வெள்ளரிஓடை கிராமத்தைச் சேர்ந்த முருகாண்டியின் வாழ்க்கை ‘அகவிழி’ எனும் பெயரில் ஆவணப்படமாகக் காணக் கிடைக்கிறது. புதுவை இளவேனில் ஒளிப்பதிவில், பாண்டியன் இயக்கியிருக்கும் ‘அகவிழி’ முருகாண்டியின் வாழ்க்கையைத் தெளிவாகவே பதிவுசெய்திருக்கிறது. அந்தப் படத்தை இணையத்தில் இலவசமாகப் பார்ப்பதற்கான இணையச்சுட்டி: >https://www.youtube.com/watch?v=7-jSoPSzLTg .

- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x