Published : 08 Jul 2015 10:47 AM
Last Updated : 08 Jul 2015 10:47 AM
நிலமும் வளமும் பகுதியில் ‘தற்கொலைகளை அதிகரிக்கும் பி.டி. பருத்தி’ பற்றிப் படித்தேன்.
இதற்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளைக் கையாளும் விவசாயிகளின் மூளை பாதிக்கப்படுகிறது. மன நோய்கள் வருகின்றன.
இதனால், தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கின்றன என்று ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. சீனாவில் நடந்த இந்த ஆய்வில், வீட்டில் இப்படிப்பட்ட மருந்துகளை வைத்திருந்தாலே போதும் அந்த வீட்டில் இருப்பவர்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் வருகின்றன என்கிறது அந்த ஆய்வு.
மோனோக்ரோடோபோஸ் (Monochtorophos) எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்து அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏன், இலங்கை கூடத் தடை செய்துள்ளது. ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தாராளமாகக் கிடைக்கிறது.
- ஏ.எம். நூர்தீன்,சோளிங்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT