Published : 01 Jul 2015 10:52 AM
Last Updated : 01 Jul 2015 10:52 AM

கல்வி அரசுடமை ஆக வேண்டும்

‘வித்தகத் தந்திரங்கள்’ கட்டுரையில் இன்றைய கல்வி நிலைப்பாட்டையும், ஆதிக்க சக்திகள் கல்வி முறையில் செய்யும் அத்துமீறல்களையும் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியிருந்தார் வே. வசந்தி தேவி.

இன்றைய துரோணாச்சாரியர்கள் ஏகலைவர்களுக்குக் கற்பிக்க முடியாது எனச் சொல்ல முடியாதுதான். ஆனாலும், ஒப்புக்கு வந்தோமா பாடத்தை நடத்தினோமா போனோமா என்ற வகையில் செயல்படும் துரோணாச்சாரியர்கள் பலர் இன்றைய பள்ளிகளில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆதிக்க சக்திகள் மீண்டும் மீண்டும் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றனவே தவிர, மறையவில்லை, மாறவும் இல்லை.

இந்த நிலை மாற வேண்டுமானால் தன்னலமற்ற ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் உருவாக வேண்டும். அதற்கு முதலில் நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் அரசுடமையாக்க வேண்டும்.

அங்கே அரசு அதிகாரிகளின் பிள்ளைகள், ஆசிரியர்களின் குழந்தைகள் ஏழை விவசாயக் குடிமகனின் குழந்தைகளோடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் பிள்ளைகளுடன் ஒன்றாய் அமர்ந்து கல்வி கற்க வேண்டும். அப்போதுதான் துரோணாச்சாரியர்கள் உண்மையான கலையை வேறுவழியின்றியாவது கற்றுத்தருவார்கள்.

- யு. பன்னீர்செல்வம்,ஓய்வுபெற்ற பள்ளித் துணை ஆய்வாளர், காரைக்கால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x