Published : 02 Jul 2015 10:50 AM
Last Updated : 02 Jul 2015 10:50 AM

மோடியைப் பாராட்டுவோம்

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கும் திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கி வைத்தபோது, ‘ஏழைகளாயிருப்பது விதிவசம் அல்ல.

அவ்வாறு ஏழைகள் அவதிப்பட அனுமதிக்க முடியாது. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு’ என்று பேசியுள்ளார்.

தான் ஏற்றுக்கொண்டுள்ள இந்துத்துவ வாழ்வியல் முறைக்கு மாற்றாக அறிவியல் நெறிப்படி ஒரு உண்மையைப் பேசியதற்காக மோடியைப் பாராட்டுவோம்.

தனி மனிதனின் வாழ்க்கை மட்டுமல்ல, மானுட சமூகத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஆளும் வர்க்கத்தினர்தான் தீர்மானிக்கிறார்கள் என்பதுதான் சமூகவியல் கோட்பாடு. ‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்ற தமிழ்ப் பழமொழியும் இந்த சமூகவியல் கோட்பாட்டைத்தான் வலியுறுத்துகிறது.

தனி மனிதர்களின் விருப்பங்கள் மட்டுமே சட்டமாக இருந்த முடியாட்சி முறைக்கு முடிவுகட்ட ஆயிரக் கணக்கான மக்கள் குருதி சிந்தியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

நமது முன்னோர்களின் மாபெரும் போராட்டங்களால் நாம்

இன்றைக்கு மக்களாட்சியுகத்தில் வாழ்கிறோம். ஆக சமூகத்தில் நடக்கும் மாற்றங்கள் இறைவனின் விருப்பங்களால் நடப்பதல்ல. ஒப்பற்ற மனிதர்களால் நடந்துள்ளது. இந்த மக்காளாட்சி நெறிக்கு மதிப்பளிக்கும் வகையில் மோடி பேசியுள்ளதை வரவேற்போம்.

- சு. மூர்த்தி, ஆசிரியர், காங்கயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x