Published : 07 Jul 2015 11:33 AM
Last Updated : 07 Jul 2015 11:33 AM

விழிப்புணர்வூட்டும் தலையங்கம்

மெத்தன மருத்துவத்தால் பாதிப்புக்குள்ளாகிற அனைவரும் தயங்காமல் நீதிமன்றத்தின் கதவைத் தட்டலாம் என்று விழிப்புணர்வூட்டும் விதமாக ‘நம்பிக்கை தரும் தீர்ப்புகள்’ தலையங்கம் இருந்தது.

மருத்துவத் துறையின் பொறுப்பின்மைக்குக் குட்டுவைத்து, 1.8 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருக்கும் நீதித் துறைக்கு நன்றி சொல்ல வேண்டும். மக்களுக்கான மருத்துவ சேவை அரசின் கடமை என்பதால், போதிய மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமிப்பதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும்.

மருத்துவர்களும் முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும். அரசு / தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பாதிக்கப்பட்டோரில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே வழக்குத் தொடுத்து நிவாரணமும் பெறுகின்றனர். பெரும்பாலானோர் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புடன் அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமலே முடங்கிவிடுகின்றனர்.

- ஜத்துஜஸ்ரா, கொடைக்கானல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x