Published : 01 Jul 2015 10:54 AM
Last Updated : 01 Jul 2015 10:54 AM
எழுத்து என்பது வாசித்தவுடன் மறந்துவிடுவதாய் இல்லாமல் வாசிப்பவருக்கு நமது பண்டைய வரலாற்றையும் மரபறிவையும் அறிந்துகொள்ள வகை செய்வதாய் இருக்க வேண்டும் என்பதை செயல்படுத்திக் காட்டியவர் புதுமைப்பித்தன் என்பதை,
வே. மாணிக்கம் எழுதிய 'புதுமைப்பித்தன் படைப்புகளில் மரபறிவு' கட்டுரை மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. தாமிரபரணி ஆற்றில் சுலோசன முதலியார் பாலத்தின் அடியில் பல முறை குளித்து மொசுமொசுவென மீன் கடி வாங்கிய இனிய அனுபவத்தைப் பெற்றிருந்தாலும் அந்த மீனின் பெயர் தெரியாது.
இன்றுதான் தெரிந்துகொண்டேன். புதுமைப்பித்தன் காலத்தில் ஸ்படிகமாய் இருந்த தாமிரபரணி நீர், இன்று மாசு படிந்து குடிக்க மட்டுமல்ல, குளிக்கக்கூடத் தகுதியற்றதாக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது. பழைய நிலையைப் பற்றி தெளிவாய் அறியும்போதுதான் இன்று நாம் செய்திருக்கும் தவறு தெரியவருகிறது.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT