Published : 06 Jul 2015 11:06 AM
Last Updated : 06 Jul 2015 11:06 AM

இக்கரைக்கு அக்கரை பச்சை

சாரு நிவேதிதா சொல்வதெல்லாம் 100% சரி என்று கூற முடியாது. அவர் சொல்லியுள்ள மெட்ரோ ரயில்களில் சென்றுவந்துள்ளேன், இக்கரைக்கு அக்கரை பச்சை கதைதான்.

ஆனால், மேலைநாடுகளில் பிரச்சினை என்றால் எப்படிச் சமாளிக்கிறார்கள், அதற்காகவே உள்ள அமைப்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதையெல்லாம் நேரில் பார்த்தால்தான் நம்ப முடியும். நாம் வளர்ச்சியில் பல ஆண்டுகள் பின்தங்கியிருந்தோம். எனவே, மெட்ரோ வருவதில் தாமதமானதில் வியப்பேதுமில்லை.

இதில் முக்கியமான விஷயம், நுகர்வோர் ஒத்துழைப்பு. இந்த வசதியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்திக்கொள்வதில் ஒவ்வொரு பயணியும் பெருமையோடு பங்குகொள்ள வேண்டும்.

- இரணியநாதன்,மின்னஞ்சல் வழியாக…

***

‘மெட்ரோ ரயில்: சில்லுனு ஒரு பயணம்’ - என்னதான் சொகுசான பயணமாக இருந்தாலும், கட்டணம் குறைக்கப்படவில்லை எனில், மிகப் பிரம்மாண்டமான இத்திட்டம், மக்களின் சேவைக்கான திட்டமாகாது!

யூசுஃப் கான்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x