Published : 02 Jun 2015 10:38 AM
Last Updated : 02 Jun 2015 10:38 AM

வலிபோக்கும் வழி அறிவோம்

மனுஷ்ய புத்திரனின் ‘நாற்காலிக்கும் சக்கர நாற்காலிக்கும் இடையே’ கட்டுரை மனத்தைத் தைத்தது.

அறிவியல் யுகம் என்று சொல்லிப் பெருமிதம் கொள்ள முடியவில்லை நம்மால். தொடர்வண்டி நிலையங்களில் ஒரு நடைமேடையிலிருந்து அடுத்த நடைமேடைக்குச் செல்ல முடியாமல் மாற்றுத்திறனாளிகள் படும்பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல. விமானப் பயணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. உலகின் ஒவ்வொரு விமான நிலையமும் ஒவ்வொரு முறையில் கட்டமைக்கப்படுகிறது.

உலகளாவிய அளவில் ஒன்றுபட்ட கட்டமைப்பு முறைகளுக்கான விதிமுறைகள் வகுக்கப்படாததால் மாற்றுத்திறனாளிகள் பெரும்துயரை அனுபவிக்கவேண்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் ஊர்திகள் எதுவாயினும் அவற்றில் அவர்கள் எளிதாக ஏறவும், துன்பமில்லாமல் பயணிக்கவும் ஏற்றவகையில் சிறப்பு இருக்கைகள் உருவாக்கப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகளோடு உயரம் குறைந்த சில ஏடிஎம்களையாவது அந்தந்தப் பகுதிகளில் வங்கிகள் உருவாக்க வேண்டும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், கனத்த காலணிகளோடு நடக்கச் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக எடை குறைந்த உலோகத்தைக் கொண்டு கால்களைத் தாங்கும் காலணிகளை உருவாக்கினார்.

அதைப் போன்ற நவீன அறிவியலின் ஆய்வுகள் மனிதர்களின் துன்பத்தை நீக்குவதாய் அமையும். சகமனிதர்களின் வலியறிவோம்... அதைப் போக்கும் வழியறிவோம்.

- முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x