Published : 16 Jun 2015 10:33 AM
Last Updated : 16 Jun 2015 10:33 AM
நதியின் வாக்குமூலம்: பாம்பு போல் வளைந்து செல்லும் காளிங்கராயன் கட்டுரையும் படமும் அற்புதம். அருமையான வரலாற்றுப் பதிவு. “நான் மற்றும் எனது சந்ததியினர் எவரும் வாய்க்காலில் இருந்து சொட்டுத் தண்ணீர் கூடப் பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லி, தனது நாட்டை விட்டு வெளியேறி ஊத்துக்குளிக்கு இடம் பெயர்ந்துவிட்டார்” - மனதை நெகிழவைக்கிறது.
ஒரு அணையின் குறிப்புகள் என் நினைவை 1960-62 ஆண்டுகளுக்கு இட்டுச்சென்றது. பள்ளி இறுதி நாட்களில் காளிங்கராயன் வாய்க்கால் பிரியும் அணையிடம் அணைத்தோப்பு என்று அழைக்கப்படும் அணையில் சரிந்தோடும் நீரில் நீந்தியுள்ளோம். ஆனால், இன்று நிலைமையே வேறு. எங்கும் களைகள் பரவியுள்ளன. மிக மோசம்.
- பி.பத்மநாபன்,மின்னஞ்சல் வழியாக…
***
ஆசியாவிலேயே முதலாவது
பவானியின் தீரத்திலே பணியாற்றும் வாய்ப்பு பெற்றவன் நான். அணை கட்டுவதையும் வாய்க்கால்கள் அமைப்பதையும் அருகில் இருந்து கண்டவன். கல் விளைந்த பூமியை நெல் விளைவிக்கும் கழனியாக மாற்றியது லோயர் பவானி அணை.
புஞ்சைப் பயிர்கள்தான் விளைவிக்க வேண்டும் என்ற அரசாணை மிக அதிக அளவில் மீறப்பட்டது. செயற்பொறியாளர் ஏ.சீனிவாசன் தலைமையில் ஒரு பெரும் இளைஞர் பட்டாளம் தொய்வில்லாமல் பணியாற்றியது. சீனிவாசன் எல்லா கிராம மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.
அவர், ஊர்த் தேவை களை நிறைவுசெய்ய முற்பட்டது மிகுந்த பாராட்டைப் பெற்றது. இரண்டு இடங்களில் காட்டாறுகளின் மேல் தண்ணீர்க் குழாயும் அதன் மீது சாலை அமைத்ததும் (aqueduct) ஆசியாவிலேயே முதலாவது என்று சொல்லப்பட்டது. அவரது பணியின் மேன்மை கண்டு ஹிராகுட் அணை கட்டும் பொறுப்பு சீனிவாசனுக்குக் கொடுக்கப்பட்டது.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT