Published : 29 Jun 2015 10:41 AM
Last Updated : 29 Jun 2015 10:41 AM

நெருக்கடி நிலைக் கசப்புகள்

ஜனநாயகத்தின் வலிமையைச் சாதாரண ஜனங்களுக்கும் புரியவைப்பதில் நெருக்கடிகாலக் கெடுபிடிகள் பெரும்பங்கு வகித்தன. மக்கள் ஒருவித பயத்தில் வாழ்ந்தனர்.

அலுவலகங்கள் நேரத்துக்குச் செயல்படுவதும், ரயில் வண்டிகள் சரியான நேரத்துக்கு வருவதுமே நெருக்கடி காலச் சாதனைகளாகச் சொல்லப்பட்டன.

தமிழகத்தில் எம்ஜிஆரும், கல்யாணசுந்தரமும் நெருக்கடி நிலை ஆதரவு நிலை எடுத்தனர். அதற்கு முன்பு இருந்த திமுக ஆட்சியின் மீதுள்ள கசப்பால், தமிழ் மக்களிடம் நெருக்கடி நிலைக்கு எதிரான மனப்பான்மை அதிகம் காணப்படவில்லை.

நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகே, அப்போது நடந்த பல கொடுமைகள் வெளியே தெரிந்தன.

நெருக்கடி நிலை கால கசப்புக்கள் இன்னும் நம் மனங்களில் தங்கியிருப்பது ஜனநாயக சக்திகளுக்கு ஒரு வகையில் நன்மை செய்வதாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x