Published : 02 Jun 2015 10:41 AM
Last Updated : 02 Jun 2015 10:41 AM
கிழக்காசிய நாடுகளில் விரிவான பயணங்களை மேற்கொண்டு அங்குள்ள அரசியல், பொருளாதாரம், மக்கள் வாழ்நிலைபற்றி எழுதிவரும் பங்கஜ் மிஸ்ரா அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளது மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதாக உள்ளது.
“மோடி ஆட்சி அதிகாரத்தில் ஓராண்டுகாலம் இருந்தபின்பும், மிகஅதிகமான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு தத்தளித்துக்கொண்டிருக்கிறார்.
சீனாவில் மோடி, சிறிய உல்லாசப் பயணங்களை மேற்கொண்ட பிற அயல்நாட்டவரைப் போலவே இன்னும் தனது புதிய அதிகாரத்தின் மணத்தை நுகர்பவராக, அதன் அலங்கார ஆடையை அணிவதை அனுபவிப்பவராக, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விசுவாசம் காட்டுவதில் போதைகொண்டவராகப் பார்க்கப்பட்டார்.
மோடி சீனாவுக்குச் சென்று மங்கோலியப் பிடிலை இசைத்தார் என்பதாலேயே சீனாவின் அண்டை நாடான இந்தியா தானாகவே ஒரு மிகப் பெரிய பாத்திரத்தை வகிக்கக்கூடியதாக ஆகிவிட முடியாது.
மோடியும் அவரது ரசிகர்களும் சீனர்களிடமிருந்து உண்மையில் கற்றுக்கொள்ள வேண்டிய ஒருவிஷயம் - சீனர்கள் மிக ஆழ்ந்த கவனத்தோடு ‘தன்னை முன்னிறுத்திக்கொள்வதையும் நிலைநிறுத்திக்கொள்வதையும் நிராகரிக்கிறார்கள்’ என்பதே.
- செ. நடேசன், ஊத்துக்குளி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT