Published : 16 Jun 2015 10:28 AM
Last Updated : 16 Jun 2015 10:28 AM
ஆகார் படேலின் ‘யோகா… மதம் சார்ந்ததல்ல, மனம் சார்ந்தது’ என்ற பதிவு அருமையாக இருந்தது. அது மட்டுமல்லாமல், யோகா குறித்த ஒவ்வொரு குடிமகனின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கவிருப்பது ஒரு வரப்பிரசாதமாகவே அமையும்.
யோகா என்ற கலை நமது மூதாதையர் நமக்கு அளித்த வெகுமதி. காலப்போக்கில் இதை மேலை நாடுகள் அங்கீகரித்தாலும் நமது நாட்டில் ஒரு சிலர் மதத்தின் பெயராலும் கட்சியின் கோட்பாடுகள் என்று வைத்துக்கொண்டிருக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளாலும் இந்த யோகா பயிற்சியை எதிர்க்க வேண்டும் என்பது முற்றிலும் பொருத்தமாகப்படவில்லை.
ஏறத்தாழ 175 நாடுகள் இதை ஆதரிக்கின்றன. 10 வருட காலம் யோகா பயிற்சியை மேற்கொண்டவன் என்பதால் கூறுகிறேன், இதை இளமையில் கற்றுக்கொண்டால், வயோதிக நாட்களில் இதன் பயனை உணரலாம்.
என்னுடன் யோகா பயிற்சி எடுத்துக்கொண்டவர்களில் 25% இந்து மதத்தைச் சாராதவர்கள்.
அதன் பலனை அனுபவத்தில்தான் உணர முடியும். எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் கொடுக்கவிருக்கும் சொத்து, அவர்களின் ஆரோக்கியமான மனதுடன் கூடிய உடம்பு. அதுதான் அவர்களின் வருங்காலத்தைச் செழுமைப்படுத்தும்.
- இரவி ராமானுஜம், திருக்குறுங்குடி.
சூரிய சர்ச்சை
யோகா, அடிப்படையில் உடற்பயிற்சி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. யோகாசனம் பல இடங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. இதுவரையில் சர்ச்சை ஏற்படவில்லை. மதம் சார்ந்துவிவாதிக்கப்படவில்லை. மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பாஜக அரசாங்கம், அரசு சார்ந்த நடவடிக்கையாக யோகாசன
நிகழ்ச்சியை அறிவித்திருப்பதும், சூரிய நமஸ்காரத்தை யோகாவுடன் இணைத்திருப்பதும்தான் சர்ச்சையாகியிருக்கிறது.
- வரகுணன் மகேஸ்வரி,மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT