Published : 22 Jun 2015 10:30 AM
Last Updated : 22 Jun 2015 10:30 AM

கி.ரா-வால் மட்டும்தான் முடியும்!

கி.ரா-வின் ‘மனுசங்க’ தொடரின் ‘ஆஸ்பத்திரி வாழ்க்கை’ கட்டுரைப் படித்து நெகிழ்ந்துபோனேன். ‘‘கும்பிட்டு அழுதார். வீட்டில் வறுமை.

நோய்க்குப் பிறகு வேலைக்குப் போக முடியலை. இந்த நோய்க்குச் சத்தான உணவு சாப்பிட வேண்டும். அது இந்த ஆஸ்பத்திரியில்தான் கிடைக்கும். பால், முட்டை, ஈரல் மட்டன் என்று இங்கேதான் கிடைக்கிறது.

கொடுக்கும் மருந்துகளை ஒழுங்காகச் சாப்பிட்டுவிட்டால் நோய் குணமாகிவிடும். வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கே போய் என்ன செய்வேன் சாப்பாட்டுக்கு என்கிறார்” என்றார் டாக்டர் கதிரேசன்.

மனித வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள். கூட இருந்து பேசுவது போல் எழுத கி.ரா. ஒருவரால்தான் முடியும். அருமையிலும் அருமை!

- கே.திலீபன்,தி இந்து’ இணையதளம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x