Published : 26 Jun 2015 10:31 AM
Last Updated : 26 Jun 2015 10:31 AM
யோகாவை இஸ்லாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விலக்கவும் இல்லை; விதியாக்கவும் இல்லை.
ஆனால், படைத்தவனை விட்டுவிட்டு, படைப்பினங்களுக்கு (சூரியன், குரு) வணக்கம் செலுத்தும் வகையிலான யோகா அடையாளத்துடன் அறிமுகப்படுத்தப்படும் சில செயல்பாடுகள் இஸ்லாமின் ஓரிறைக் கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டவை என்ற அடிப்படையில் அவற்றை மட்டும் தவிர்த்துக்கொள்ளலாம்.
முஸ்லிம்கள் அன்றாடம் ஐந்து நேரம் அவர்களுக்கு விதியாக்கப்பட்டுள்ள தொழுகையை உணர்ந்து உளத் தூய்மையுடன் நிறைவேற்றினால், அதையும் தாண்டி எந்தக் கலைக்கும் அவசியம் இருக்காது.
ஆனால், அந்தத் தொழுகையை முறைப்படி மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பெற்றோர், ஒழுக்கவியல் ஆசிரியர்கள் அதில் குறை வைக்கின்றனர். அக்குறை, யோகா என்ற அடையாளத்துடன் வேறு சிலரால் களையப்படுகிறது.
இன்று யோகாவைத் தூக்கிப் பிடிப்பவர்களிடமும் உள்நோக்கம் உணரப்படுகிறது. கண்மூடித்தனமாக எதிர்க்கும் சிறுபான்மையினரிடமும் பக்குவமின்மை தெரிகிறது.
அவரவர் பொறுப்புகளைச் சரிவரச் செய்தால், இந்த விவாதமே அவசியமற்றது.
- எஸ்.கே. ஸாலிஹ்,காயல்பட்டினம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT