Published : 06 Jun 2015 10:34 AM
Last Updated : 06 Jun 2015 10:34 AM

ஆள் பிடிக்கும் வேலை

29.05.15 நாளிதழின் முதல் பக்கத்தில் அரசுக் கல்லூரிகளில் துஷ் பிரச்சாரம் செய்து ஆள் பிடிக்கும் வேலையை அம்பலப்படுத்தி உள்ளீர்கள்.

ஆள்பிடிக்கும் வேலையைத் தடுக்க எந்த சட்ட வழிமுறைகளும் இன்றி அரசுக் கல்லூரி முதல்வர்கள் தவிப்பது வருத்தத்துக்கு உரியது. தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு, அரசுக் கல்லூரிகளுக்கு அடுத்து மிகக் குறைந்த கட்டணத்தில் உயர் கல்வி வழங்குவது அரசு உதவி பெரும் கல்லூரிகளே. ஆனால், இந்த அரசு உதவி பெரும் கல்லூரிகளின் அவலம் என்னவெனில், அரசுக் கல்லூரிகளைப் போல் சுயநிதிப் பிரிவுகள் கல்லூரிக்கு வெளியே இல்லாமல், அந்தக் கல்லூரிகளே கல்லூரிக்குள் நடத்துவதுதான்.

பல அரசு உதவி பெரும் கல்லூரிகள் அந்தக் கல்லூரியில் அரசு உதவி பெரும் பாடப் பிரிவுகள் இருப்பதாகத் தங்கள் விளம்பரத்தில் காட்டிக்கொள்வதே இல்லை.கல்லூரியின் முன் வைத்திருக்கும் விளம்பரப் பலகையிலும் இவையெல்லாம் இங்குள்ள பாடப்பிரிவுகள்.

ஒவ்வொன்றுக்கும் கட்டணம் இது என்று இருக்கும். அரசு பாடப் பிரிவுகள் என்ன இருக்கிறது என்பதே தெரியாது. புதிதாக கல்லூரி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் அதைச் சுயநிதிக் கல்லூரி என்றே கருதிக்கொள்வர். அதையும் தாண்டி கல்லூரிக்குள் நுழைந்தால் சுயநிதிப் பாடப் பிரிவில் பணியாற்றும் ஆசிரியர்கள் நாற்காலியிட்டு அமர்ந்து, சுயநிதி சேர்க்கைக்குப் பிரச்சாரம் செய்வார்கள். அரசும் கல்லூரிக் கல்வி இயக்கமும் இதைக் கவனிக்க வேண்டும்.

- நா. மணி, ஈரோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x