Published : 13 Jun 2015 11:28 AM
Last Updated : 13 Jun 2015 11:28 AM
காதறாக் கள்ளன் செம்புலி ஜம்புலிங்கம் பற்றிய நிகழ்வுகளைப் படித்தபோது, அன்றைய காலகட்டத்தில், அதே மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் உள்ள களக்காடு மலையை ஒட்டிய பகுதியில் எனது குழந்தைப் பருவத்தை அசை போடத் துவங்கியது.
எனது தாய்வழிப் பாட்டி குறுங்குடி ‘ஊரின் பிற்பகுதியைத் தனது பெயராகக் கொண்டவர். சேட்டைகள் செய்து அடம்பிடித்துச் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்குக் கதை சொல்வது உண்டு.
அதில் பெரும்பாலும் ஜம்புலிங்கம் கதைகள்தான். அது மட்டுமல்லாமல் அதிக துஷ்டத்தனம், குறும்புகள் செய்யும் குழந்தைகளைச் செல்லமாக ‘ஜம்புலிங்கம்’ என்றே அழைப்பது வழக்கம்.
மேலும், அந்தக் கால வீடுகளில் கண்ணாடி வைத்து எடுத்து கட்டி என்ற பகுதியில் (சிறிது உயரமாக இருக்கும்) அரிக்கேன் விளக்கைக் காட்டி, அந்த மேல் பகுதியில் ஏழைகளின் நண்பன் ஜம்புலிங்கம் நடமாடுவதாகவும் பயமுறுத்தி எங்களைச் சாப்பிட வைத்தது நினைவுக்குவருகிறது.
- இரவி ராமானுஜம், திருக்குறுங்குடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT