Published : 05 Jun 2015 11:39 AM
Last Updated : 05 Jun 2015 11:39 AM
‘சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரிப்படுகையில் ஒரு பயணம்’ தொடருக்கு வாழ்த்துக்கள்!
வீராணம் ஏரிக்குக் காவிரி நீர் கொள்ளிடம் கீழணை மூலம் வடவாறு வழியாகப் பெறப்படுவது மட்டுமே இப்போதுள்ள ஒரே நீராதார வழி. ஆனால், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள பிற ஏரிகளின் மூலம் வீராணம் ஏரிக்கும் நீராதார வழியாக இருந்து தற்போது வெறும்வழித்தடமாக மட்டுமே உள்ளது.
குறிப்பாக, பொன்னேரி எனப்படும் 1,000 ஏக்கர் பரப்பளவுள்ள கங்கைகொண்ட சோழபுர ஏரியின் வரத்து வாய்க்கால், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் எல்லாம் ஆக்ரமிப்பில் உள்ளதால் பொன்னேரி வெறும் மண்ணேரியாகக் காணப்படுகிறது.
பொன்னேரிக்கு நீர் வழங்கும் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள பல ஏரிகளின் நிலையும் இதேதான். 2013-ம் ஆண்டு ஜூன்-ஜூலை மாதம் கர்நாடாகாவில் பெய்த மழையால் கொள்ளிடத்தில் விநாடிக்கு 1 முதல் 2 லட்சம் கன அடி நீர் (ஒரு வாரத்துக்கு) கடலில் கலந்து வீணானது.
வீராணம் ஏரிக்கு வடவாறு மூலம் காவிரி நீரைக் கொண்டு செல்வதுபோல், பொன்னேரிக்கும் அணைக்கரையிலிருந்து காவிரி நீர் வரச் செய்யலாம். அப்படிச் செய்தால், கொள்ளிடத்தில் வரும் வெள்ளத்தில் பெரும் பகுதியை ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பொன்னேரியில் சேமித்து, இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பாசனத்தை அதிகப்படுத்தவும் பயன்படுத்தலாம்!
- பே.வே. நந்தா,ஜெயங்கொண்டம்.
***
இது எதிர்காலத்துக்கானது
வீராணம் ஏரியைப் பற்றிய கட்டுரை அருமை. அதே நேரத்தில், நாம் ஒவ்வொரு மாவட்டதிலுள்ள ஏரிகளையும் இணைத்தால் மழைக் காலங்களில் அதிக நீராதாரங்களைப் பெருக்கலாம். நீர் நிலைகளின்அருகே யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கக் கூடாது.
அது நீர்வளத்தை வற்றிப்போகச் செய்யும். மழை நீர் சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும். இது நம் எதிர்காலத்துக்கானதாகும்!
- பிரகாஷ் ராவ்,மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT