Published : 23 Jun 2015 10:31 AM
Last Updated : 23 Jun 2015 10:31 AM

யோகாவை ஏன் எதிர்க்க வேண்டும்?

உலக அளவில் சுகாதார விஷயத்தில் மோசமான நாடுகளின் தரவரிசையில் இந்தியா 2- வது இடத்தில் உள்ளது. உலகிலேயே அதிகமான மக்களுக்கு கழிப்பறை இல்லாத நாடாகவும், அதிகமான அளவு சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஆற்றில் கலக்கும் நாடாகவும் இந்தியா உள்ளது. அனைத்துலக அமைதி அட்டவணையின்படி உலக அளவில் அமைதி நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவோ 143-வது இடத்தில் உள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, யோகா கொண்டாடுவதால் உலகில் மக்கள் அனைவருக்கும் உடல் நலமும்

மனநலமும் உலக அமைதியும் கிடைத்துவிடும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத் தெரியவில்லை. உலக அமைதி, மக்களின் நலன் ஆகியவற்றைச் சாத்தியமாக்குவதற்கான மாற்றங்களைச் செய்யாமல் யோகா மூலமாக மாற்றங்களைச் செய்வோம் என்பது சரியல்ல. மக்கள் நலன் சார்ந்த சிக்கல்களை மூடி மறைக்கவே இது உதவும்.

- சு.மூர்த்தி, ஆசிரியர், காங்கயம்.

***

ஏன் எதிர்க்க வேண்டும்?

யோகா என்பது உடல்நலம் பேணும் ஒரு கலை, ஒரு பயிற்சி. இதுதொடர்பாக தேவையற்ற மத மாச்சர்யங்களும், வீண் விவாதங்களும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். யோகா. மோடி கண்டுபிடித்த கலையல்ல. எனவே, எதிர்க்க வேண்டும் என்பதற்காக எந்த ஒன்றையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது தேவையில்லாதது.

கே எஸ் முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x