Published : 18 Jun 2015 10:39 AM
Last Updated : 18 Jun 2015 10:39 AM
வீராணம் ஏரிப்படுகையைத் தொடர்ந்து, கொங்கு நாட்டை வளப்படுத்தும் பவானி ஆறு பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து படித்துவருகிறேன். இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான கட்டுரை இது.
இதே பவானி ஆற்றைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1904-ம் ஆண்டு எச்சரிக்கைக் கல்வெட்டு ஒன்றை வைத்து பவானியைப் பராமரித்திருக்கிறார்கள். அதில், ‘இதனால் எல்லோருக்கும் தெரிவிப்பது காவிரியாற்றில் சுடுகாட்டுத்துறை முதல் கூடுதுறை வரை துணி துவைப்பது, ஆடு மாடு கழுவுவது, பாத்திரம் தேய்ப்பது ஆகிய எந்த அசிங்கமும் செய்வோருக்கு ரூ.50-க்கும் குறையாத அபராதம் விதிக்கப்படும்.
TSA ரங்கசாமி செட்டி, சேர்மன்’என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இப்படிப் பராமரிக்கப்பட்ட பவானி ஆற்றைத்தான் நெசவு மற்றும் ஆலைக் கழிவுகளால் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி வருகிறோம் நாம்!
- கி. ஸ்ரீதரன், தொல்லியல் துணைக் கண்காணிப்பாளர் (ஓய்வு), சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT