Published : 06 Jun 2015 10:30 AM
Last Updated : 06 Jun 2015 10:30 AM

கோவில்பட்டிதான் போராட்டக்களம்!

கி.ரா-வின் மண்மனம் தொடரில் கோவில்பட்டி பற்றிய அடையாளங்களும் 4.6.2015-ல் ‘இப்படிக்கு இவர்கள்’ பகுதியில் கே.எஸ். இராதாகிருஷ்ணனின் கடிதமும் படித்தேன்.

‘கோவில்பட்டியில் காங்கிரஸும் பொதுவுடைமைக் கட்சிகளும் தீவிரமாகக் களத்தில் இருந்தன’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதோடு மற்றுமொரு செய்தியையும் பகிர்வது வரலாற்று அவசியம் எனக் கருதுகிறேன். திராவிடர் கழகம் 1944-ல் துவக்கப்பட்டது என்றுதான் திராவிட இயக்க வரலாற்று ஆசிரியர்கள் இன்று வரை கூறிவருகிறார்கள். அது தவறு. இதோ ஒரு வரலாற்றுச் செய்தி: 25.12.1925-ல் கோவில்பட்டியில் திராவிடர் கழகத்தின் 17-வது ஆண்டு விழா நடைபெற்றது.

எம்.எல். பிள்ளை. கா.சு.பிள்ளை என்று அழைக்கப்பட்ட கா.சுப்பிரமணியபிள்ளை தலைமை தாங்க, வ.உ.சி. அவர்கள் ‘அறத்துப்பால்’ என்ற தலைப்பிலும், பு.சி. புன்னைவன நாத முதலியார் ‘மெய்யுணர்தல்’ என்ற தலைப்பிலும். இ.மு.சுப்பிரமணியபிள்ளை ‘ஒளிநூல்’ (சோதிடம்) என்ற தலைப்பிலும் சாமி விருதை சிவஞான யோகிகள், ‘வஜ்ரசூசி’, ‘கோபநிஷதம்’ (வைர ஊசி அருகணி) என்ற தலைப்பிலும் உரையாற்றியிருக்கிறார்கள்.

இதற்கான ஆதாரம் 24.01.1926 ‘குடி அரசு’ இதழில் வெளிவந்த செய்தி ஆகும். 1925-ல் 17-வது ஆண்டு விழா என்றால், திராவிடர் கழகம் தோன்றியது 1908 ஆகும். எனவே, திராவிடர் இயக்கத்தின் வரலாறு கோவில்பட்டியிலிருந்துதான் தொடரப்பட வேண்டும்.

- பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு), உலகனேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x