Published : 13 Jun 2015 11:29 AM
Last Updated : 13 Jun 2015 11:29 AM

கண்காணிப்பு அவசியமில்லை

இன்னமும் தொடரும் கண்காணிப்பு என்ற கட்டுரையில் கண்காணிப்பு என்பது குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் ஒரு கொடூரத் தாக்குதலாகவே உருமாறியிருக்கிறது என்பதை எட்வர்டு ஸ்னோடன் மிகத் தெளிவாகவே விளக்கியுள்ளார்.

அந்தரங்கத்துக்கான உரிமைகள் இன்று பகிரங்கமாகவே மீறப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நாம் புழங்கும் இடங்கள், தொடர்புகொள்ளும் உறவுகள், நட்புகள் என்று அனைத்தும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. எல்லாப் பிரச்சினைகளுக்கும் கண்காணிப்புகளையும் தண்டனைகளையுமே உடனடித் தீர்வுகளாகப் பலரும் பரிந்துரைக்கின்றனர்.

பரிந்துரைப்பவர்கள் ஒரு வகையில் அவர்களது அந்தரங்கங்களையும் கண்காணிப்புக்கு உட்படுத்தச் சம்மதிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

கண்காணிப்பு அரசியலைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கத் தொடங்குவோமானால், வெளிவர இயலாத மாய வலைப்பின்னலுக்குள் மாட்டிக்கொண்டவர்களாகிவிடுவோம்.

எனவே, சமூக முரண்பாடுகளைப் புரிந்துகொண்டு அவற்றைச் சரிசெய்வதற்கு அரசுகள் நேர்மையாகவே முயலுமானால், யாரும் யாரையும் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

இந்தத் திசைவழியில் செயல்பட அரசுகளைப் புதிய தலைமுறையினர் நிர்ப்பந்திக்கும்போதுதான் பறிபோய்க்கொண்டிருக்கின்ற அந்தரங்கத்துக்கான உரிமைகள் வருங்காலத்திலாவது நமக்குச் சாத்தியப்படும்.

- மருதம் செல்வா, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x