Published : 24 Jun 2015 10:27 AM
Last Updated : 24 Jun 2015 10:27 AM

மனிதனுக்கு நாகரிகம் கற்றுத்தந்தது ஆறுகள்தான்

பவானி ஆற்றைப் பற்றி எழுதிவந்த தொடர் கட்டுரைகள் மிகவும் அவசியமானவை. கடந்த 50 ஆண்டுகளில்தான் சுற்றுச்சூழல் மிகவும் சீர்கேடாகியுள்ளது.

நதிகளில் கழிவுநீர் கலப்பது, ஆற்றில் மணலைச் சூறையாடுவது, காடுகளை அழிப்பது, மரங்களை வெட்டுவது என வளர்ச்சியின் பெயரால் இயற்கை காவுகொள்ளப்பட்டது இந்த அறிவியல் யுகத்தில்தான். `மனிதனுக்கு நாகரிகம் கற்றுத்தந்தது ஆறுகள்தான். ஆனால், மனிதன் நாகரிகத்துடன் நடந்துகொள்ளவில்லை.

தொழிற்சாலைகளின் கழிவுகள் ஒருபக்கம் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பதுபோல, ஒவ்வொரு நகரத்திலும் உற்பத்தியாகும் கழிவுநீர் அப்படியே கடலிலோ, ஆற்றிலோ கலக்கப்படுகிறது. இதற்கு யாரைப் பொறுப்பாக்குவது, சென்னையின் ஒட்டுமொத்தக் கழிவுகளும் நன்னீராக இருந்த கூவம் ஆற்றைக் கழிவுநீர் வாய்க்காலாக மாற்றிவிட்டது. எதிர்கால மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசு உடனடியாக விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதாள சாக்கடை இல்லாத பெருநகரங்களின் கழிவுநீரை, நாம் குடியிருக்கும் வீடுகளுக்குப் பின்னால் ஒரு தோட்டம் அமைத்து கழிவுநீரை அங்கே செலவிட்டால் நல்லது. நதிகளில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து கிடக்கின்றன. ஒருபக்கம் ஆறுகளைத் தாயாகவும் தெய்வமாகவும் வணங்கிவிட்டு, ஆபத்தான கழிவுகளை, குப்பைகளைக் கொட்டுகிறோம். கல்வி கற்ற சமூகம் எதைக் கற்றது எனத் தெரியவில்லை.

- ஹரிஹரன்,தோஹா கத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x