Published : 29 Jun 2015 10:45 AM
Last Updated : 29 Jun 2015 10:45 AM
27.6.2015 அன்று வெளியான ‘என்னம்மா… இப்படிப் பண்றீங்களேம்மா? கருத்துச்சித்திரம் மிகுந்த ரசனைக்குரியதாக இருந்தது.
அதேசமயம், அரசியலில் பெண்கள் முதன்மை இடத்தை அடைவதே மிகுந்த போராட்டத்துக்குரிய நம் நாட்டில், ஊழல் குற்றச்சாட்டுக்கும் முறைகேட்டுக்கும் உள்ளாவது அரசியலில் பெண்கள் மீதான நம்பிக்கையைத் தகர்த்தெறியச் செய்கிறது.
ஒருசில நூறு பெண்களை முன் மாதிரியாகக் கொண்டே முன்னேறிவரும் பெண் சமூகத்துக்குப் பேரவமானத்தை ஏற்படுத்திவிட்ட சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே, ஸ்மிருதி இரானி, பங்கஜா முண்டா போன்றவர்கள் சம்பந்தப்பட்ட கட்சியால் கண்டிக்கப்படாவிட்டாலும், சமூகத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
- கூத்தப்பாடி கோவிந்தசாமி,தருமபுரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT