Published : 04 Jun 2015 02:48 PM
Last Updated : 04 Jun 2015 02:48 PM

காந்திக்கு இழுக்கில்லை

தேசப்பிதாவின்றி ரூபாய் நோட்டுகள் வெளிவருவதால் அவருக்கொன்றும் இழுக்கில்லை. என்றும் அவர் நம் மனதில் அழியாமலும் கிழியாமலும் இருக்கிறார். தேசப்பிதா படங்கள் மாட்டப்பட்டிருக்கும் இடங்களில் சத்தியம் இருக்கிறதா? ரூபாய் நோட்டுகளில் தேசப்பிதா இருப்பதால் லஞ்சம், கள்ளப்பணம் குறைந்துள்ளதா? ஊரெங்கும் சிலைகள் அமைப்பததால் அகிம்சை தலைதூக்கியிருக்கிறதா? பெயரளவுக்கு மட்டும் காந்திக்குப் பெருமை சேர்ப்பதில் பலனில்லை. அவரது உருவத்தை விடக் அவரது கொள்கைகள் நிறைந்து காணப்படுவதுதான் அவருக்கு நாம் மரியாதை செய்வதாகும்.

- கி. ரெங்கராஜன், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x