Published : 12 Jun 2015 11:32 AM
Last Updated : 12 Jun 2015 11:32 AM
மேகி நூடுல்ஸைப் பற்றி பல்வேறு விதமான கருத்துகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன.
நாம் அப்படியே கொஞ்சம் பின்னோக்கிப் பயணித்தால், நம் கால்கள் தானாகவே ஒரு வயலைத்தான் சென்றடைகின்றன.
அங்கு நம் கண்கள் ரசாயன உரம் தெளிக்கப்பட்ட தானியங்களைப் பார்க்கின்றன. அங்கு நோய்களே பயிராக வளரும் கண்கொள்ளாக் காட்சியைக் காண்கிறோம். நம் அடிப்படை உணவே நமக்குத் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது.
உடல்நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களை வயலிலிருந்து ஆரம்பித்தால்தான் நம் வாழ்வு சிறக்கும் என்ற பாடத்தைத்தான் நாம் கடந்து வந்த பாதை நமக்குக் கற்பிக்கின்றது.
- ஜே. லூர்து, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT