Published : 18 Jun 2015 10:42 AM
Last Updated : 18 Jun 2015 10:42 AM
மத உணர்வுகள் மற்றும் அரசியல் ஆதாயம் தேடுதல் ஆகியவற்றின் அடிப்படையில் யோகா பயிற்சியை எதிர்ப்பது துரதிர்ஷ்டவசமானது.
சூரிய நமஸ்காரமானது தூக்கமின்மை மற்றும் அது தொடர்பான விளைவுகளைச் சரிப்படுத்துவது மட்டுமில்லாமல் ஜீரணமண்டலத்தை ஆரோக்கிய நிலையில் இயங்கச்செய்கிறது. மேலும், தொப்புள்கொடி சம்பந்தப்பட்ட நரம்பு பகுதி நேரடியாக சூரிய நமஸ்கார செயலாற்றத்துக்கு உட்படுவதால் அப்பகுதியின் தாக்கத்தைப் பெருமளவு பெற்றுள்ள மத்திய நரம்பு மண்டலம், பார்வை நரம்புகள் நன்றாகச் செயல்பட வழிவகை செய்கின்றன.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, யோகா பயிற்சி அட்டவணையிலிருந்து சூரிய நமஸ்காரப் பயிற்சியை நீக்கியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர். பிச்சுமணி ,திப்பிராஜபுரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT