Published : 15 Jun 2015 10:54 AM
Last Updated : 15 Jun 2015 10:54 AM

ரத்த தானம்... சில விளங்கங்கள்...

நலம் வாழ பகுதியில் ‘இரும்புச் சத்தையும் கொழுப்பையும் சீராக்கும் ரத்த தானம்’ என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரையைப் படித்தேன். அதில் உள்ள சில கருத்துகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

1. ஜூன் 14 நாளை ‘உலக ரத்த தானம் நாள்’ என்று சொல்வதைவிட, ‘உலக ரத்தக் கொடையாளர் நாள்’ (World Blood Donor Day) என்று சொல்வதே சரியானதாக இருக்கும்.

2. ரத்த தானம் செய்தவர் இழந்த ரத்தம் இரண்டு நாட்களில் சுரந்துவிடும் என்ற கருத்து தவறு. இழந்த ரத்தத்தை ஈடுகட்ட குறைந்தது மூன்று வாரங்கள் ஆகும்.

3. ரேபீஸ் நோய் சிகிச்சைக்குப் பிறகு, ஓராண்டு வரை ரத்த தானம் செய்யக் கூடாது என்று கட்டுரையாளர் சொல்லியிருக்கிறார். ரேபீஸ் நோய்க்கு இதுவரை சிகிச்சை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

4. ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்தைச் சரியான அளவில் வைத்துக்கொள்ள ரத்த தானம் உதவுகிறது என்றும், ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு ரத்த தானம் செய்யப்படும்போது சீரடைகிறது என்றும் இரண்டு கருத்துகள் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

இவை புதிய செய்திகளாக உள்ளன. இவற்றுக்கான அடிப்படை மருத்துவ அறிவியல் விளக்கத்தைத் தெரிவித்திருந்தால் என்னைப் போன்ற மருத்துவர்களும் தெரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கும்.

- டாக்டர் கு. கணேசன், ராஜபாளையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x