Published : 30 Jun 2015 10:43 AM
Last Updated : 30 Jun 2015 10:43 AM
‘சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பு வரலாறு’ கட்டுரை படித்தேன். கல்விப் புலங்களில், தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பு வரலாறு முழுமையாக எழுதப்பட்டுப் பாடத்திட்டத்தில் வைக்கப்படாததும், மொழிபெயர்ப்புகுறித்த ஆய்வுகள் தமிழில் நடத்தப்படாததும் இதற்குக் காரணமாக அமைகின்றன. ஏ.கே. ராமானுஜம், ம.இலெ. தங்கப்பா போன்றோரின் சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் இன்னும் கல்விப் புலங்களை எட்டவில்லை என்பது மொழிபெயர்ப்பைப் பரவலாக்குவதன் மீதான நம்முடைய மெத்தனத்தைக் காட்டுகிறது.
செப்டம்பர் 30-ம் நாளை உலக மொழிபெயர்ப்பு நாளாக, உலகின் பல நாடுகளும் கொண்டாடிக்கொண்டிருக்க, நாம் அந்த தினத்தில் செய்தது என்ன? தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மொழிபெயர்ப்புத் துறைகள் உருவாக்கப்பட்டு’ செவ்வியல் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் முன்னெடுகப்பட வேண்டும்.

- முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT