Published : 03 Jun 2015 10:56 AM
Last Updated : 03 Jun 2015 10:56 AM

சுயநலமற்ற பண்பு

கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட நேரு, கஷ்டப்படும் மனிதனையே கடவுளாகக் கண்டார் என்பதை ‘நேரு என்ற மாபெரும் சாகசக்காரர்' என்ற கட்டுரை மூலமாக அறிந்தபோது கண்களில் நீர் கோத்தது.

மிகப் பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த நேரு, வறுமையில் வாடிய மக்களுக்காக அயல்நாடுகளிடம் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திய சுயநலமில்லாத பண்புக்கு முன் இன்றைய அரசியல்வாதிகள் துளியும் ஒப்பிட முடியாதவர்கள்.

மேலும், நேருவின் மீது அள்ளி வீசும் அவதூறு நெருப்புகள் அவரைப் புடமிட்ட தங்கமாகவே ஜொலிக்கச் செய்கிறது. மூதறிஞர் ராஜாஜியே நேருவின் திறமையை ஏற்றுக்கொண்ட பின்னர், மக்களின் இதயத்தில் நிறைந்துவிட்ட ரோஜாவின் ராஜாவை, இந்திய வரலாற்றில் இருந்து யாரும் எளிதில் பிரித்துவிட முடியாது என்பதை பிரிவினை பேசுவோருக்குப் புரியும்படி சொன்ன கட்டுரையாளருக்கு நன்றி!

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x