Published : 05 Jun 2015 11:45 AM
Last Updated : 05 Jun 2015 11:45 AM
ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு அசாத்தியமான மனிதர்.
கை கால்களை அசைக்க முடியாத, பேச முடியாத, தானாக எதையும் செய்ய இயலாத அவர், சீக்கிரமே இறந்துவிடுவார் என மருத்துவர்களால் சொல்லப்பட்டவர்.
ஆனால், அக்கூற்றைப் பொய்யாக்கி இன்றும் நம்மிடையே வாழ்ந்துவருகிறார். பிரபஞ்சத் தோற்றம் உள்ளிட்ட அண்டவியல் ஆய்வுகளில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட அவரின் கருந்துளைகள் (Black Hole) தொடர்பான கட்டுரைகள் முக்கியமானவை.
பெருமை பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் `லூகாசியன் இருக்கை’ பதவியும் அவரைத் தேடி வந்தது. அவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக ஸ்டீபன் பின்னேகன் இயக்கி உள்ளார். மனத்திட்பத்தால் தன் உடலியல் குறைபாட்டை பின்னுக்குத் தள்ளி, பல சாதனைகளைப் புரிந்திருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு முன்மாதிரிதான்.
- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT