Published : 22 May 2015 10:28 AM
Last Updated : 22 May 2015 10:28 AM

மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

டெல்லியில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது அம்மாநில நிர்வாகத்தில் ஆளுநர் மூலமாக மத்திய அரசு தலையிடுவதாகவே தோன்றுகிறது.

அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே வைத்துக்கொண்டால் டெல்லி மாநில அரசு என்பதற்கு என்ன அர்த்தம்? கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து தேர்தல் நடத்தி முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டிய தேவையில்லை.

ஒரு அதிகாரியை வைத்தே டெல்லி நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ளலாம் என்றுதான் மக்கள் நினைப்பார்கள். தவிர ஆஆக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் அரங்கேறிவருகின்றன. இவற்றால் மாநில அரசுக்கு மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கும் கெட்டபெயர்தான் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி-7.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x