Published : 11 May 2015 10:17 AM
Last Updated : 11 May 2015 10:17 AM

காக்க வைக்கும் நீதித் துறை

நீதித் துறையில் ஏற்படும் தாமதங்கள்குறித்து தலையங்கத்தில் (மே 7) குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள் மறுக்க முடியாதவை.

பெருகிவரும் மக்கள் தொகை, அதிகரித்திருக்கும் வழக்குகள் என நீதித் துறை திணறிவரும் சமயத்தில் இந்தப் பிரச்சினைகளைக் கையாளும் வகையில் கூடுதல் நீதிபதிகளை நியமிப்பது, நீதிமன்றக் கட்டிடங்களை அதிகரிப்பது முக்கியமானது.

உள்கட்டமைப்பு வசதி எதுவும் ஏற்படுத்தாத அரசின் மெத்தனப் போக்கால், கோடிக் கணக்கான மக்கள் நீதிமன்ற வாசலில் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் நீதித் துறை மீது மக்களின் நம்பிக்கை குறைந்துவிடக் கூடாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

- ஆர்.பாபு கிருஷ்ணராஜ்,கோயமுத்தூர் -2.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x