Published : 11 May 2015 10:22 AM
Last Updated : 11 May 2015 10:22 AM
‘நிலுவையிலுள்ள திட்டங்கள்: சில உண்மைகள்’ கட்டுரை படித்தேன். ‘மக்களுக்கான’ வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்துக்கான எதிர்ப்புதான் காரணம் என்று பாஜகவினர் கூறுவதை சமூக ஆர்வலர் வெங்கடேஷ் நாயக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய நிதி அமைச்சகத்திடமிருந்து பெற்ற தகவல்கள் மூலம் எஸ்.வி. ராஜதுரை மிகச் சரியாக அம்பலப்படுத்தியுள்ளார்.
‘மக்களுக்காக’ என்று முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்கள் என்றால் ‘கார்பரேட் முதலாளிகளும் பெரும் பணக்காரர்களும்தான்’ என்று தங்கள் செயல்பாடுகள் மூலம் நிரூபித்துவருகிறார்கள்.
எஸ்.வி. ராஜதுரை போன்ற அறிஞர்களின் கட்டுரைகள் ‘தி இந்து’வில் வருவது சாதாரண மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
-செ. நடேசன், ஊத்துக்குளி.ஆர்.எஸ்.
***
கார்ப்பரேட் நலன்தான் பொதுநலனா?
‘நிலுவையிலுள்ள திட்டங்கள்: சில உண்மைகள்’ என்ற தலைப்பில் எஸ்.வி. ராஜதுரையின் கட்டுரையைப் படித்தேன். காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தில் பாஜக அரசு சில திருத்தங்களைச் செய்து புதிய சட்டமாக நிறைவேற்ற முயற்சிக்கிறது. அப்படிச் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள் அனைத்தும் அப்பட்டமாகப் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றன என்பதுதான் இப்போதைய பிரச்சினைக்குக் காரணம். காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சில சலுகைகள்கூட இந்தச் சட்டத்தில் கைவிடப்படுகின்றன. மோடி அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தைத் திரும்பப்பெறுவது மூலம் மட்டுமே நாட்டின் நலன்களையும், மக்களின் நலன்களையும் பாதுகாத்துவிட முடியாது. நாட்டின் நலனும், விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருநிறுவன நலன்களையே பொதுநலனாகச் சித்தரித்து விவசாயிகள், பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் புதிய காலனியச் சட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்படவேண்டும்.
-மா. சேரலாதன்,தர்மபுரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT