Published : 13 May 2015 10:54 AM
Last Updated : 13 May 2015 10:54 AM
அன்னையர் தினக் கட்டுரைகள் ஒரு தாயின் பன்முகத்தன்மையைப் படம்பிடித்துக் காட்டின.
நம் முன்னோர்கள் தாய்க்குப் பெருமை சேர்க்கும் விதமாகப் பல செய்தி களைச் சொல்லியுள்ளனர். ஆதிசங்கரரும் பட்டினத்தாரும் தாயின் இறுதிச் சடங்கில் பங்கு கொள்ள ஓடிவந்தனர் என்பது வரலாற்றுச் செய்தி.
ஒருவர் துறவியான பின்னர் அவர் காலில் மன்னன் முதல் மக்கள் வரை எல்லோரும் விழுந்து வணங்குவர். அவருடைய தந்தை உள்பட. ஆனால், அவருடைய தாயின் காலில் அந்தத் துறவி விழலாம் என்ற பெருமை தாய்க்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
காரைக்கால் அம்மையாரின் காலில் அவருடைய கணவர் விழுந்து வணங்கியதை நாம் பெரிய புராணத்தில் அறிகிறோம்.
- இரா. தீத்தாரப்பன்,மேலகரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT