Published : 28 May 2015 10:23 AM
Last Updated : 28 May 2015 10:23 AM

மீன் குடிப்பதால் நீர் வற்றாது

வனப் பாதுகாப்பின் உண்மையான பொறுப்பாளிகள் வன வாழ் பழங்குடியினரே என்பதை ‘வனப் பாதுகாப்பின் பங்காளிகள்’ தலையங்கம் தெளிவாக்கியுள்ளது.

‘‘வனத்தில் இருந்து வன விலங்குகளை எப்படிப் பிரித்துப் பார்க்க முடியாதோ அதே போல் வன வாழ் மக்களையும் வனத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது’’ என்பது சத்தியமான வரிகள். பழங்குடியினர் இல்லாத வனம் என்பது வியாபார சிந்தனை.

வனத்தையும் இதர இயற்கை வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கப்போடும் திட்டத்தின் முதல்படி. காப்பகங்கள் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள் என்ற பெயரில் மனிதர்களை வெளியேற்றினால்தான் வன வளத்தைக் காக்க முடியும் என்பது பெரும் புரட்டு…

ஆதிவாசி வாழ்வதால் காடு என்றும் அழியாது!

- பி.எல்.சுந்தரம்,எம்.எல்.ஏ,பவானி சாகர் சட்டமன்றத் தொகுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x