Published : 15 May 2015 10:42 AM
Last Updated : 15 May 2015 10:42 AM
கிருஷ்ணா நீர் தொடருக்கு மனமார்ந்த பாராட்டுகள். சென்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 39,000 ஏரிகளைத் தூர்வார வேண்டும். குளம், குட்டைகளில் சாக்கடை நீர் கலக்கும் இடங்களை ஒருங்கிணைத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவுநீரை நன்னீராக மாற்றி அதே குளங்களில் சேமிக்கலாம்.
மேலும், பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கப்பட்டு நடைமுறையிலுள்ள நகராட்சி, மாநாகராட்சிப் பகுதிகளிலும் ஆறு, கால்வாய், குளம், குட்டைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து அவற்றைப் பாதாள சாக்கடைத் திட்டத்துடன் இணைத்தாலே அப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகளைக் காக்கலாம்! காவிரி மற்றும் கொள்ளிடத்தில் சுமார் பத்து மாவட்டங்களுக்குக் குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர்த் தி்ட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
ஆனால், இவற்றில் நீரைச் சேமிக்கும் தடுப்பணைகள் எத்தனை? கடந்த 60 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரே தடுப்பணை மாயனூரில் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள ஒன்றே ஒன்று மட்டுமே.
கல்லணை முதல் அணைக்கரை வரை குறைந்தது 10 தடுப்பணைகள் கட்டி, தண்ணீரைச் சேமித்தால் இதன் கரையோரங்களில் உள்ள மாவட்டங்களுக்கு நிலத்தடி நீர் உயரவும், குடிநீ்ர் தேவைக்கும் பயன்படும்.
இதற்காக நதிநீர் மேம்பாடு மற்றும் நீர்ப் பாசன மேலாண்மைத் துறை என்று தனியாக ஒரு துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்!
- வே. நவேந்திரன், மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT