Published : 19 May 2015 10:41 AM
Last Updated : 19 May 2015 10:41 AM
அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் சோடை போனவர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள், பேருக்காகவும் பண பலத்தைக் காட்டவுமே தனியார் பள்ளிகளில் லட்சக் கணக்கில் செலவழிக்கின்றனர்.
படிப்பில் ஆர்வம் இருந்தால் எந்தப் பள்ளியில் படித்தாலும் பரிமளிக்கலாம். படிப்பதற்கேற்ற சூழலை உருவாக்கிக் கொடுப்பது மட்டுமே நம் கடமை. இதைத்தான் நிரூபித்துக் காட்டியுள்ளார், ‘ஒரு பாட்டியின் வைராக்கியம்’ கட்டுரையில் வரும் ஜெனிபர் நிஷா.
- கே. சிராஜுதீன்,முசிறி.
***
அரசுப் பள்ளிகளில் சாதனையாளர்களை உருவாக்கும் அர்ப்பணிப்பான ஆசிரியர்கள் உண்டு என்ற உண்மை, பொறுப்பை உணர்ந்து படித்தால் எந்தப் பள்ளியிலும் சாதனை படைக்கலாம் என்று நிரூபித்த ஜெனிபர் நிஷா என்று பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.
அரசுப் பள்ளிகள்தான் ஆதரவற்றவர்களைக் கைதூக்கிவிடும் ஆபத்பாந்தவன்கள் என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டாலும், அரசுப் பள்ளிகள் பற்றிய சமூகப் பார்வை எப்போதுதான் மாறப்போகிறதோ?
- இரா. இராமலிங்கம்,மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT