Published : 11 May 2015 10:25 AM
Last Updated : 11 May 2015 10:25 AM
கி.ரா.வின் சிக்கனமான கிண்டல் நடை ‘வடகரை’ எழுத்தோவியத்தை மேலும் அழகுபடுத்தியிருக்கிறது.
மக்கள் நடையில் அவர் எதையும் எழுதுவதால் சட்டென்று மனதில் அவர் எழுத்து ஒட்டிக்கொள்கிறது. “அந்தந்த மண்ணில் தோன்றும் கதைசொல்லிகள் அந்த மொழி அழகில் எழுதுவதே சிறப்பு” சிறப்பான கருத்து. மனதில் பட்டதை நூல்வெளியிலும் பளிச்சென்று சொல்லியிருக்கிறார் கி.ரா. இதுதான் சிறுகதை என்று நினைத்து எழுதிக்கொண்டிருந்தபோது அவர் எழுதிய ‘கதவு’ சிறுகதை எல்லாவற்றையும் மாற்றிப்போட்டது.
நாவலின் உத்திகளை உள்வாங்கி, ஆனால் புனைவு அல்லாத உண்மை நிகழ்வுகளின் தோரணமாய்த் தமிழில் வேறுபட்ட இலக்கியவகை உருவாகிவருவதை பொன்னீலனின் அம்மா எழுதிய ‘கவலை’ என்ற சுயசரிதையைச் சுட்டிக்காட்டி, மு. ராஜேந்திரனின் ‘வடகரை’ எனும் ஒரு வம்சத்தின் வரலாற்றினை கி.ரா. அறிமுகப்படுத்தியுள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமான படைப்பாளியாய் இயங்கி, ‘கோபல்ல கிராமம்’ போன்ற சிறப்பான படைப்புகளைத் தந்த தமிழின் மூத்த படைப்பாளர் கி. ராஜநாராயணன் நூல்வெளியில் கொட்டோ கொட்டென்று கொட்டிமுழக்கியிருக்கிறார். இந்த ஆராவாரம் தொடரலாமே!
- சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT