Published : 02 May 2015 10:44 AM
Last Updated : 02 May 2015 10:44 AM

எல்லாம் ஒன்றுதானே?

‘ஆசிரியர்கள் அன்றும்…இன்றும்… என்றும்!’ கட்டுரை படித்தேன்.

சுயநிதிப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளுக்கு ஒரு சவாலாகவே உள்ளன என்று கட்டுரை ஆசிரியர் சொல்கிறார். சமச்சீர் கல்வி முறை அமல்படுத்திய பின்பு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சுயநிதிப் பள்ளிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கத் துடிப்பதற்கு, அவற்றின் ஆங்கிலவழிக் கல்வி முறையும் ஒரு காரணம்.

இப்போது அரசுப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு ஆங்கிலவழிக் கல்விக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விலை இல்லாப் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சைக்கிள் மற்றும் மடிக்கணினி வழங்கப்படுகின்றன.

ஆனால், சுயநிதிதிப் பள்ளிகளில் இப்படியா? எவ்வளவுதான் செலவழித்தாலும் அரசுப் பள்ளிக்கும் சுயநிதிப் பள்ளிக்கும் அரசுத் தேர்வு கேள்வித்தாள் ஒன்றுதானே?

- ஜி. புருசோத்தமன்,திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x