Published : 04 May 2015 10:50 AM
Last Updated : 04 May 2015 10:50 AM

தரத்தை நிர்ணயிக்கும் தேர்வல்ல

ஜே.ஈ.ஈ தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டு மாணவர்களின் சாதனை மிகச் சாதாரணமாக இருக்கிறது.

வெற்றி பெற்றோரில் பெரும்பாலானோர் மிக அதிகக் கட்டணம் பெரும் தனியார் பயிற்சி மையங்களில் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் பயின்றவர்கள். இந்நுழைவுத் தேர்வை முன்னிறுத்தித் தரப்படும் சிறப்புப் பயிற்சியைப் பெற்றவர்கள்.

ராஜஸ்தானின் கோடா போன்ற நகரங்கள் இத்தகைய பயிற்சி மையங்களுக்குப் பெயர் போனவை. ஒரு இளைஞனின் வாழ்க்கையையே இவை எவ்வாறு தொலைக்கின்றன என்பதை சேத்தன் பகத் எழுதியுள்ள தொடர் நாவல்களின் மூலம் அறியலாம்.

எளிய பாடத்திட்டத்தின் மூலம் சிறப்புமிகு திறன்களை வளர்க்க முடியும். சுமை மிக்க பாடத்திட்டம் எத்தகைய திறனையும் உருவாக்காமல் போகலாம். வகுப்பறைக் கற்பித்தல்தான் அடிப்படை. நமது வகுப்பறை பொதுத் தேர்வை முன்னிறுத்தி நடைபெறுகிறது.

பொதுத் தேர்வு வினாத்தாளுக்கும் ஜே.ஈ.ஈ. வினாத்தாளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

அத்தேர்வில் பங்கு பெற விரும்புபவர் நடுத்தர வர்க்கத்தினரே. அவர்களும் தனிப் பயிற்சி மையங்களை நம்பித்தான் நுழைவுத் தேர்வில் பங்குகொள்கிறார்கள்.

அதிகபட்சமாக ஆயிரம் பேர் வெற்றி பெறத் தக்க ஒரு தேர்வுக்காக, ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் மீது பெரும் பாரத்தை இறக்க முடியாது. நமது பொதுத் தேர்வு வெறும் மனன அறிவை மட்டுமே சோதிப்பதாக இருக்கிறது.

இதை மாற்றுவது ஐ.ஐ.டி-யில் நுழையும் வாய்ப்பை அதிகப்படுத்தக்கூடும். உயர் கல்வியில் தன்னம்பிக்கையோடு தொடர் பயணம் செய்யவும் உதவும். ஜே.ஈ.ஈ. முடிவுகளைத் தொடர்ந்து எழுப்பப்படும் குரல்களுக்கு அதிக மதிப்பு தர வேண்டியதில்லை. அது கல்வியின் தரத்தை நிர்ணயிக்கும் தேர்வல்ல.

- ச.சீ. இராஜகோபாலன்,கல்வியாளர், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x