Published : 08 May 2015 10:31 AM
Last Updated : 08 May 2015 10:31 AM

பாராட்டுக்குரிய பணி

‘தி இந்து’ நாளிதழில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் கல்வி குறித்த கட்டுரைகள் அருமையானவை.

கட்டுரையாளர் ஒவ்வொருவரும் அவரவர் பள்ளிப் பருவ அனுபவங்களைத் திரும்பிப் பார்த்து, இன்றைய பள்ளிக் கல்வியின் அவலங்களை, நெஞ்சை உருக்கும் வண்ணம் சொல்லிச்செல்கின்றனர். நினைவுகளில் கனக்கும் அந்த இழப்பு அவர்களது மட்டுமல்ல, நம் அனைவருடையதும்.

குறிப்பாக, மறைந்துவரும் எங்கள் தலைமுறையினர் அனைவருடையதும். இன்றைய போட்டி உலகின் இதயமற்ற சுழற்சியில் சிக்கிக்கொண்டுவிட்ட குழந்தைகளுக்கு, அத்தகைய ஒரு உலகை, தங்கள் பாட்டி-பாட்டனார் இயற்கையாக அனுபவித்த, மூச்சுமுட்டாத, பரந்த வெளியில் சஞ்சரித்து மகிழ்ந்த ஒரு உலகை, உறவுகளில் மலர்ந்த உலகை, கற்பனையிலும் காண இயலாது.

ஒப்பிடவும் இயலாமல் அவ்வுலகம் மறைந்துவிட்ட நிலையில், இந்தக் கட்டுரையாளர்களின் கண் வழியே தரிசிக்கும் ஒரு அரிய வாய்ப்பு! வளர்ச்சி என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோரும் இளைஞரும் இழந்த உலகின் அழகை, வர்ணங்களை ஒரு முறையேனும் காணட்டும்.

அந்த தரிசனம் மாற்று உலகுக்கு வழி காட்டட்டும். இந்தக் கட்டுரைகளை வெளியிடுவதற்கு என் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.

- வசந்தி தேவி,

மூத்த கல்வியாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x